டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!

0
370
#image_title

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!

 

குமார் என்பவர் சேலம் மாவட்டத்திலுள்ள மணியார்குண்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இவர் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தாட்கோ மேலாளர் அலுவகத்தில் தனது விவசாயத்திற்காக  டிராக்டரை கடன் மூலம் வாங்க சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்காக  அவருக்கு நேர்காணல் நடைபெற்றது. அதன்பின்பு வங்கி மூலம் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது.  மேலும் 7.5 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்க  50% மானியம் வழங்கப்பட்டது. அந்த மானியத்தை வாங்குவதற்கு தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

தாட்கோ வேலாளர் ஜி.காந்தி இம்மானியத்தை வாங்குவதற்கு குமாரிடம் 15 ஆயிரத்தை  லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை குறித்து குமார் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார்  தெரிவித்தார்.

அதன்பின்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து குமாரிடம் பணம்  15 ஆயிரத்தை கொடுத்து இரசாயணம் தடவி அனுப்பிவைத்துள்ளார்கள் . அப்போது  தாட்கோ அலுவகத்திற்கு சென்ற போலீசார் மாறுவேடத்தில் மறைந்திருந்து மேலாளர்  காந்தியை கவனித்துள்ளார்கள்.

மேலும் குமார் லஞ்ச பணத்தை காந்தியிடம் கொடுத்த போது மேலாளர் காந்தி  அந்த பணத்தை பணியாளர் சாந்தியிடம் கொடுக்கமாறு கூறியுள்ளார். இந்த பணத்தை சாந்தி வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புபோலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் லஞ்சம் வாங்கிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

Previous articleவெளியான மாமன்னன் படத்தின் மாஸான போஸ்டர்! டிரெய்லர் இன்று மாலை வெளியாகின்றது!!
Next article30 வயதில் கல்யாணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆகி இருப்பேன்! திருமணம் குறித்து பிரபல நடிகை தமன்னா பேட்டி!!