நடிகராக ஒரு புறம் அரசியல்வாதியாக மறுபுறம் என இரு வேறு வாழ்க்கைகளை ஒரே நேரத்தில் வாழ்ந்த நெப்போலியன் அவர்கள் நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து நடிக்காததற்கான காரணத்தை அவரே தெரிவித்திருக்கிறார்.
புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் படிப்படியாக சினிமா துறையில் வளர்ச்சி கண்டு தொடர்ந்து அரசியலில் நுழைந்து முயற்சிக்கும் பொழுது முதலில் தோல்வியை சந்தித்த இவர் அதன் பின் பணம் கொடுத்து பதவியைப் பெற்று அதன் மூலம் நிறைய பணம் சம்பாதித்து அமெரிக்கா சென்று விட்டார் என ஒரு தரப்பினர் தெரிவித்தாலும் தன் மகனுக்காக அமெரிக்கா சென்றதாக நடிகர் நெப்போலியன் தெரிவித்திருந்தார்.
தன்னுடைய மூத்த மகன் தனுஷ் அவர்களுக்கு திருமணமாகி 100 வது நாள் விழாவை சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நெப்போலியன் அவர்கள் அஜித்துடன் இணைந்து நடிக்காததற்கான காரணத்தை தெரிவித்திருப்பதாவது :-
நடிகர் அஜித் அவர்கள் திரைப்படங்களில் சிறந்து விளங்கிய தருணங்களில் தான் அரசியலில் நுழைந்து விட்டதாகவும் அப்பொழுது தன்னால் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்க முடியவில்லை என்றும் நெப்போலியன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். எனினும் நடிகர் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமானால் எதிர்மறை கதாபாத்திரத்தில் கூட நடிக்க தான் தயாராக இருப்பதாக நடிகர் சங்கத்தில் எனினும் நடிகர் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமானால் எதிர்மறை கதாபாத்திரத்தில் கூட நடிக்க தான் தயாராக இருப்பதாக நடிகர் சங்கத்தில் தெரிவித்ததாகவும் ஆனால் இறுதிவரை அவருடன் நடிப்பதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக நடிகர் அஜித்துடன் பேசுவதற்கான வாய்ப்பு நடிகர் சங்க பிரச்சனையின் மூலம் கிடைத்ததாகவும் அதை நினைத்து தான் மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்திருப்பது அஜித் ரசிகர்களிடையே வரவேற்கத்தக்க விஷயமாக அமைந்திருக்கிறது.