மாவீரன் படத்தில் இந்த நடிகரின் குரலா?? படக்குழு வெளியிட்ட தகவல்!! 

0
34

மாவீரன் படத்தில் இந்த நடிகரின் குரலா?? படக்குழு வெளியிட்ட தகவல்!! 

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள மாவீரன் படத்தில் பிரபல நடிகர் ஒருவரின் குரல் இடம் பெற்றுள்ளது.

தமிழில் மண்டேலா என்ற படத்தை இயக்கியவர் மடோன் அஸ்வின். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகும் இந்த படத்திற்கு தெலுங்கில் மாவீருடு என பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர், நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சரிதா இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்ட நிலையில் வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள நிலையில் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் படம் குறித்த புதிய தகவல் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிடுவதாக இருந்தது. அதாவது மாவீரன் படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் குரல் இடம் பெற்றுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

மாவீரன் படத்தின் டிரைலரில் சிவகார்த்திகேயன் அடிக்கடி மேல்நோக்கிப் பார்க்கும் காட்சிகள் இடம் பெற்று இருக்கும். இந்த நிலையில் மேலிருந்து விஜய் சேதுபதி பேசுவதாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டு மாவீரனின் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.