சமீப காலமாகவே இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வரக்கூடிய நடிகர் ஶ்ரீ. இவர் போதைக்கு அடிமையாகி விட்டார் என்றும் அதனால் தான் மனநல பாதிக்கப்பட்டு தற்போது இது போன்ற ஒரு நிலையில் இருப்பதாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அவை அனைத்தும் இல்லை இதற்கு வேறொரு காரணம் இருக்கிறது என அவருடைய தோழி உண்மையை உடைத்து இருக்கிறார்.
நடிகர் ஸ்ரீ அவர்களின் தோழியான தோத்தி ஸ்ரீனுடைய இந்த நிலைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா இருவர் மட்டுமே காரணம் என்றும் இவர்கள் இருவரால் தான் தற்பொழுது ஸ்ரீ இது போன்ற ஒரு மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார் என கூறியுள்ளார். முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய டான் திரைப்படத்தில் நண்பராக இருக்கக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஶ்ரீ அவர்களை தேர்ந்தெடுத்த பொழுது அவர் தனது நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என சிவகார்த்திகேயன் மறுத்து விட்டதாகவும் அதன் பின் நடிகர் சூர்யா தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர் ஸ்ரீக்கு சம்பளம் கொடுக்காததாலும் அதிக அளவு மன உளைச்சலுக்கு தன்னுடைய நண்பன் ஆளாக்கிவிட்டதாக தோத்தி தெரிவித்திருக்கிறார்.
நடிகர் ஸ்ரீ அவர்களினுடைய இந்த நிலைக்கு சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் தான் காரணம் என்ற தகவல் தற்பொழுது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மிகப்பெரிய நடிகர்கள் என்றால் இப்படித்தான் செய்வீர்களா என தங்களுடைய கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனால் அடுத்தடுத்து வெளியாக இருக்கக்கூடிய சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படங்கள் அடி வாங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.