அட நம்ம டிடி-யா இது?? கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை!!

அட நம்ம டிடி-யா இது?? கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை!!

விஜய் தொலைக்காட்சி உலக புகழ் பெற்று தொலைக்காட்சி என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை சுருக்கமாக டிடி என்று அழைக்கிறார்கள். அவ்வபோது திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்தவர். மேலும் எம்ஃபில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

மேலும் டிடி ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களுடன் நிகழ்ச்சி நடத்தி வந்தார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதையும் 2013 விகடன் வழங்கியது.
அட நம்ம டிடி-யா இது?? கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை!!

இவரின் அழகிய முகத்திற்கும், அழகிய சிரிப்பிற்கும், படபட பேச்சுக்கும் என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் இவர் தற்போது எந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இல்லை என்றாலும் சமூக வலைதளம் மூலம் தன் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளார். மேலும் இவர் பொதுவாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது பல புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார். இந்த நிலையில் அண்மையில் மாடர்ன் உடை அணிந்த போட்டோ ஷூட் ஒன்றினை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இவர் பகிர்ந்த புகைப்படத்திற்கு இவரது ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரளாகி வருகிறது. டிடி மாடர்ன் உடையில் இருக்கும் அந்த புகைபடம் செய்தியின் இடையில் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment