ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு பதில் இனி இவர் படமா? மத்திய அரசின் முடிவு?
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கர் கடந்த 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி உயிரிழந்தார். அதனால் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி அவருடைய நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று நாடு முழுவதும் வீர சாவர்க்கரின் நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் நேற்று மகாசபா அலுவலகத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தொண்டர்களும், அலுவலக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் இந்து மகாசபா சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டது.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியதாவது நாட்டில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களை பொறிக்க வேண்டும். மேலும் பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும் சாலைகளுக்கும் வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்த கடிதத்திற்கு மத்திய அரசின் முடிவு என்ன என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.