தேர்தல் ஆணையத்தின் செயல்! கொந்தளித்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி!

Photo of author

By Sakthi

தேர்தல் பிரச்சாரம் நடந்த சமயத்தில் திமுகவின் இளைஞரணிச்செயலாளர் உதயநிதி தன்னுடைய பிரச்சாரத்தின்போது முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சிவ்ராஜ் மற்றும் அருண் ஜெட்லி உள்ளிட்டோரின் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குறிய வகையில் பேசினார் இதனால் சர்ச்சை வெடித்தது.இது தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து என்னுடைய தாய் நன்றாகத்தான் நடத்தப்பட்டார் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக அவரை இழுக்காதீர்கள் என சுஷ்மாவின் மகன் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதில் தெரிவித்த உதயநிதி சீனர்களை ஓரங்கட்டிவிட்டு குறுக்கு வழியில் கட்சியின் பொறுப்பிற்கு வந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் என்னை விமர்சனம் செய்தார். ஆனால் மூத்த தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு குறுக்குவழியில் நான் கட்சி பொறுப்பிற்கு வரவில்லை அவ்வாறு பிரதமர் பொறுப்பிற்கு வந்தவர் நீங்கள் தான் என்று அவருக்கு பதிலடிகொடுத்தேன். மற்றபடி அவர்கள் இருவரையும் களங்கபடுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை என தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த நோட்டீசில் தேர்தலுக்கு தொடர்பு அல்லாத ஒரு தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட அவதூறு கருத்துக்களை பிரசாரத்தின்போது நீங்கள் பேசி இருக்கிறீர்கள். இது தேர்தல் விதிமீறல் ஆகும் ஆகவே இது குறித்து நாளை மாலை 5 மணிக்குள் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இருக்கின்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி தனிமனித விமர்சனம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆனால் செந்தில்பாலாஜி அவர்களை மிகத் தரக்குறைவாக பேசிய அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது என்ன தேர்தல் ஆணையமா அல்லது பிஜேபியின் பினாமி ஆணையமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.