இந்த காரணத்திற்காக தான் திமுக முக்கிய நிர்வாகிகள் தற்காலிக நீக்கமா? கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிளவு!

Photo of author

By Rupa

இந்த காரணத்திற்காக தான் திமுக முக்கிய நிர்வாகிகள் தற்காலிக நீக்கமா? கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிளவு!

திமுக பத்தாண்டுகள் கழித்து இந்த சட்டமன்ற தேர்தலில் தான் மிகப்பெரிய வெற்றிவாகை தட்டியது. அதற்கு அடுத்தபடியாக மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. முதலில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் ஐந்து அறிக்கைகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றுதான் மகளிர் காண இலவச கட்டணமில்லா பேருந்து பயணம். இது மக்களிடையே வெகு வரவேற்பு பெற்றது. இவ்வாறு மக்களின் தேவைகளை உணர்ந்து பல சலுகைகளை திமுக அரசு செய்து வருகிறது. இவ்வாறு ஒரு பக்கம் பல சலுகைகள் செய்தாலும் அதற்கு எதிராக விலைவாசியும் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.

அதேபோல பால் பால் விலையை குறைத்து விட்டு அதற்கு மாற்றாக பாலால் தயாரிக்கப்படும் மற்ற பொருட்களின் விலையை ஏற்றியது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் திமுக தங்கள் செய்த சலுகைகளை விளம்பரம் செய்வதிலேயே முக்கிய பங்கு ஆற்றி வருகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அதற்கு அடுத்தபடியாக நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விட்டதை பிடிக்கலாம் என்று அதிமுகவின் எண்ணம் கனவாகவே முடிந்தது. ஏனென்றால் அதிமுகவின் பலமாக காணப்படும் மேற்கு மண்டலத்தில் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. அதேபோல திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் வெற்றி வாகை சூடியது.

அதேபோல நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிமுகவிலிருந்து விலகி தனித்துப் போட்டியிட்டது. இதுவும் அதிமுகவிற்கு பெருத்த அடியாகவே இருந்தது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது திமுகவிலிருந்து முக்கிய ஐந்து நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பது, தற்பொழுது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக 5 திமுக நிர்வாகிகள் செயல்பட்டு உள்ளனர். திருப்பூர் தேனி நீலகிரி ஆகிய மூன்று மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் அவ்வாறு செயல்பட்டதால் தற்காலிகமாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார். இது கட்சிக்குள்ளேயே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.