ஜிகா வைரஸ் க்கு இது தான் தீர்வா? இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்!

Photo of author

By Rupa

ஜிகா வைரஸ் க்கு இது தான் தீர்வா? இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்!

கொரோனா தொற்றின் பாதிப்பு இரண்டு ஆண்டுகளாக மக்களை தாக்கி வருகிறது. இதற்கிடையே பல வைரஸ்களின் தாக்கம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா முதல் அலையில் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படா விட்டாலும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.  இதனையடுத்து கருப்பு பூஞ்சை,வெள்ளை பூஞ்சை,போன்ற தொற்றுகள் ஏற்பட்டு அதற்கு மக்கள் பாதிக்கப்பட்டனர்.மதுரை அருகே இத்தொற்றால் ஓர் சிலர் உயிரை விடும் அபாயமும் ஏற்பட்டது.அதனையடுத்து தற்போது கப்பா வைரஸ் இருவருக்கு பரவியதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.அதனை அடுத்து தற்போது ஜிகா வைரஸ் என்பது தற்போது உருவாகியுள்ளது.

ஜிகா வைரஸ் எப்படி பரவுகிறது?
ஏடிஸ் என்ற ஒரு வகை கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. வைரஸ் ஆனது இரவு நேரத்தை விட பகல் நேரத்தில் அதிக அளவு மக்களை தாக்குகிறது.இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு தொற்று மூலம் பரவுவதில்லை.ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவரிடம்  உடலுறவு வைத்துக்கொள்வது மூலமும்,ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் மற்றொருவருக்கு ஏற்றப்படும் போது பரவுகிறது.

இந்த ஜிகா வைரஸ் தாக்கினால் அதிகளவு காய்ச்சல்,உடம்புவலி,தலைவலி,மூட்டு வலி,சிவந்த கண்கள் போன்றவை அறிகுறிகளாக காணப்படும்.குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.இந்த வைரஸ் கர்ப்பிணிப் பெண்களை பாதித்தால் அவர்களது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் வைரஸ் பரவும்.ஜிகா வைரஸ் அவ்வாறு பரவினால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மைக்ரோ பாலி போன்ற பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்போதுவரை இந்தப் ஜிகா வைரஸிற்கு  எந்தவித தடுப்பூசியும் கண்டறியவில்லை. அதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டை சுற்றியும் தேவையற்ற  தண்ணீர் தேங்குவதையும் ,தேவையற்ற குப்பைகளை வீட்டின் வெளியே போடுவதையும் தவிர்க்க வேண்டும்.குறிப்பாக இந்த வைரஸ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஆண்களை அதிகளவு தாக்குவதாக கூறியுள்ளனர்.தற்பொழுது கேரளாவில் இந்த வைரஸ் அதிகப்படியாக பரவுகிறது.