சூர்யா 42 திரைப்படத்தின் தலைப்பு இதுவா?  வெளியான லேட்டஸ்ட் தகவல்!

0
91

சூர்யா 42 திரைப்படத்தின் தலைப்பு இதுவா?  வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 42 படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.

அஜித் நடித்த வீரம்,விசுவாசம், விவேகம், போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவா அடுத்து சூர்யாவை வைத்து சரித்திர கதை அம்சம் கொண்ட படத்தினை இயக்கி வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படம் ஃபேண்டஸி, அட்வென்ச்சர், மற்றும் ஆக்சன் நிறைந்த படமாக இரண்டு பாகமாக வெளியிடப்பட இருக்கிறது. இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூவி கிரியேஷன் நிறுவனத்தினர் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திசா பத்தானி, மற்றும் இவர்களுடன் யோகி பாபு, கோவை சரளா, கிங்ஸ்லி, ஆனந்தராஜ் உள்பட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பத்து மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தான் நிறைவு பெற்றது. இந்த படத்தின்  அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.

சூர்யா 42 படமானது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் உட்பட பத்து மொழிகளில் மொழிகளில் ஒரு பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது.  இத்தனை மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ஒரு சக்தி வாய்ந்த பிரபலமான  பெயரை தான் தலைப்பாக வைக்க வேண்டும் என எண்ணிய பட குழு படத்திற்கு “வீர்” பெயரிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் படத்தின் தலைப்பு குறித்து படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.மேலும் சிறுத்தை சிவா இயக்கி அஜித் நடித்த அனைத்து படங்களுக்கும் V என்ற எழுத்தில் தான் படங்களின் பெயர்கள் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.