இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அஜித்துடன் இந்த படத்தில் இணையும் வில்லன் இவர்தானா? இணையத்தில் வைரலாகி வரும் தகவல்!

0
170
Is this the villain who joins director Vignesh Sivan and Ajith in this film? Information going viral on the Internet!
Is this the villain who joins director Vignesh Sivan and Ajith in this film? Information going viral on the Internet!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அஜித்துடன் இந்த படத்தில் இணையும் வில்லன் இவர்தானா? இணையத்தில் வைரலாகி வரும் தகவல்!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரில்  ஒருவரான அஜித் பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார். அந்த வகையில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இந்த படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் ஓப்பனிங் வசூலில் முதலிடம் பெறப்போகும் படம் எது என அனைவருடைய மனதிலும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.

மேலும் தியேட்டர் பகிர்வு தொடர்பாக பல விவகாரங்கள் நடந்து கொண்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் என வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62 ஆம் படத்தை இயக்க உள்ளார். விரைவில் இந்த படத்தை சூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூட்டிங் நெருங்கி வருவதினால் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றி விவரங்கள் வெளியாகி வருகின்றது.

ஏகே 62 படத்தில் பிரபல நடிகர் அரவிந்சாமி அஜித்திற்கு வில்லனாக நடிக்க உள்ளார் என திரையுலக வட்டாரங்கள் பேசி வருகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தகவலும் படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. மேலும் தற்போது கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என இணையதளத்தில் தகவல் வெளியாகி வருகின்றது.

இதற்காகவும் படக்குழுவினர் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

author avatar
Parthipan K