தமிழ் திரையுலகில் இளையராஜாவின் இசை என்பது காலத்தால் அழிக்க முடியாத காவியமாக மாறி இருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இவருடைய இசை தமிழ் திரையுலகை ஆண்டு வருகிறது என்றே கூறலாம். ஒரு புறம் இசையில் ஜாம்பவானாக இருந்தாலும் மறுபுறம் ஒரு வருடம் நடந்து கொள்ளும் முறை என்பதில் இவர் பல இடங்களில் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
காரணம், இளையராஜாவிற்கும் பாரதிராஜாவின் சகோதரரான ஜெயராஜ் இருவருக்கும் நீண்ட கால மற்றும் நெருக்கமான நட்பு இருந்துள்ளது. இளையராஜா அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்தார். அந்த திரைப்படத்தை காண்பதற்காக இளையராஜா ஜெயராஜ் மற்றும் அவரது அண்ணி உட்பட அனைவரையும் அழைத்து சென்று இருக்கிறார். திரைப்படத்தை பார்த்தவுடன் ஜெயராஜ் இந்த திரைப்படம் 50 நாட்கள் ஓடும் என உறுதியளித்திருக்கிறார்.
ஆனால் இளையராஜாவோ, எனக்காக கூற வேண்டாம் உண்மையை சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு மீண்டும் ஜெயராஜ் உண்மையாகவே திரைப்படம் 50 நாட்கள் ஓடும் என கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அந்த திரைப்படம் 100 நாட்கள் 150 நாட்கள் 175 நாட்கள் என தொடர்ந்து கூடிய பொழுது ஒவ்வொரு நாளுக்கும் நேரில் சென்று ஜெயராஜ் பார்த்தீர்களா இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது போல கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இவர்களுடைய நட்பு இருக்கும்பட்சத்தில், அடுத்ததாக 16 வயதினிலே திரைப்படத்தை காண்பதற்காக ஜெயராஜ் அவர்களை இளையராஜா அழைப்பு சென்று படம் முடிந்த பின்பு ஜெயராஜ் அவர்களை தானே வீட்டில் விட்டு விடுவதாக கூறி தன்னுடைய காரைக்கு அழைத்துச் சென்று இளையராஜா படம் குறித்து கேள்வி கேட்டுள்ளார். அப்பொழுது இந்த படத்தில் நடுநடுவே லேக் ஆகிறது என ஜெயராஜ் கூறியவுடன், முகத்தை கடுமையாக மாற்றிக்கொண்டு கீழே இறங்கு என இளையராஜா கூறியிருக்கிறார். அதன்பின் ஜெயராஜ் அவர்கள் தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்றுவிட்டாராம். படம் வெளியான பின்பு 16 வயதினிலே திரைப்படத்தை பின்னணி இசையோடு பார்க்கும் பொழுது நன்றாக இருந்தது என நேரில் சென்று ஜெயராஜ் அவர்கள் மன்னிப்பு கேட்டு அன்று பின்னணி இசை இல்லாமல் கேட்கும் பொழுது எனக்கு அவ்வாறு தோன்றியது என்றும் பின்னணிசையோடு இந்த திரைப்படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.