பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுசித்ரா இதனால்தான் வெளியேறினாரா? வெளியான தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் சுசித்ரா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் ஓட்டுகளால் தான் வெளியேற்றப்பட்டார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மை கதை வேறு ஒன்றாம். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சுசித்ரா தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோதே அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து யாரோ சிலர் தன்னை கொலை செய்ய முயல்வதாகக் கூறி நள்ளிரவில் பரபரப்பை கூட்டினார்.

அப்போது நிகழ்ச்சி குழுவினருக்கு இவரை சோவுக்கு அனுப்பலாமா என்ற சந்தேகம் தோன்றியதாம்.

இந்தநிலையில் நிகழ்ச்சிக்கு சென்றால் சுசித்ரா நிகழ்ச்சியில் முழு ஈடுபாடு செலுத்தாமல் பிக் பாஸை தொல்லை செய்வதை மட்டுமே வேலையாக செய்திருக்கிறார். வீட்டிற்குள் அழுவது புலம்புவது, ஆர்ப்பாட்டம் செய்வது, கத்துவது என்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டதால் சேனல் தரப்பு கடுப்பாகி அவரை வெளியேற்றி விட்டார்களாம்.

இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.