ஹார்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயர் சிறந்த வீரரா? ரசிகர்கள் இடையில்  மோதல்!!

0
143
Is Venkatesh Iyer a better Virara than Hardik Pandya? Clash between fan!!
Is Venkatesh Iyer a better Virara than Hardik Pandya? Clash between fan!!

ஹார்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயர் சிறந்த வீரரா? ரசிகர்களுக்கிடையே  மோதல்!!

ஹார்திக் பாண்டியா வலது கை பேட்டிங் மற்றும் வலது கை பந்து வீச்சாளர் இவரின்  வேகம் நடுத்தரம் ஆகும்.இவர் சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார். 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வானவர். அதன்பின் இந்தியா அணியில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் அவருக்கு முதல் வாய்ப்பு 2017 டெஸ்ட் போட்டியில் தான் கிடைத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015 முதல் 2021 வரை ஆடியுள்ளார். அதனையடுத்து இவர் 2022 முதல்  தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிவருகிறார். இவர் குஜராத் அணி கேப்டனாக உள்ளார். இவருக்கு 2018  ஆம் ஆண்டு காயம் ஏற்பட்டது. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு காயம் குணமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். இவர் சிறந்த கேப்டனாக செயல்பட்டு குஜராத் அணிக்கு 2022 ஆம் ஆண்டு கோப்பையை வென்றார். இவர் சிறந்த ஆல்ரவுண்டராகவும் உள்ளார்.

இதனை தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரும்  ஐபிஎல் போட்டிகளில் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்கிறார். தற்போது இந்திய  அணிக்கு ஒருநாள் போட்டிக்கு  சிறந்த ஆல்ரவுண்டர் தேவை என்று செய்தி வெளிவந்தது. இந்த நிலையில் ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஹார்திக் பாண்டியாதான் தேர்வாகியுள்ளார்.

அதனையடுத்து வெங்கடேஷ் ஐயர் நேர்காணல் ஒன்றில் ஹார்திக் பாண்டியா நல்ல திறமைசாலி என்றும் இந்திய அணியில் இடம் பிடிக்க அவரைப் போல் சிறப்பாக விளையாடவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Previous articleமுதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சூப்பரான  வேலை!! ரூ 133100 சம்பளத்தில் அருமையான வாய்ப்பு!! 
Next articleபெண்ணின் அதை திருடிய வாலிபர் !! பெரிய கலவரமான அதிர்ச்சி தரும் நிகழ்வு!!