உங்கள் கிரிடிட் ஸ்கோர் குறைவாக இருக்கா? இதை அதிகரிக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

உங்கள் கிரிடிட் ஸ்கோர் குறைவாக இருக்கா? இதை அதிகரிக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

இன்றைய காலகட்டத்தில் பணம் இல்லாமல் வாழக்கையை ஒரு நொடி கூட நகர்த்த முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.உழைத்து ஈட்டும் வருமானம் குடும்ப செலவிற்கு மட்டுமே சரியாக இருக்கிறது என்பதால் அவசரத் தேவைக்கு பணம் இல்லாமல் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.

அதிக வட்டிக்கு கடன் வாங்கி விட்டால் நிம்மதியின்றி வாழ வேண்டியிருக்கும்.எனவே குறைந்த வட்டியில் வங்கிகள் கொடுக்கின்ற கடனை பெறுவது நல்ல முடிவாக இருக்கும்.ஆனால் வங்கியில் கடன் பெறுவது என்பது எளிதான விஷயமல்ல.

நீங்கள் எந்த வங்கி மற்றும் பைனான்ஸில் கடன் பெற விண்ணப்பத்திருந்தாலும் உங்கள் சிபில் ஸ்கோரை பொறுத்தே கடன் வழங்கப்படும்.உங்கள் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் அவசர காலத்தில் கடன் பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிடும்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற முதலில் தங்கள் சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.சிபில் என்பது வாடிக்கையாளரின் தரவுகளை சேகரித்து கொடுக்கும் ஒரு நிறுவனமாகும்.

வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை உரிய நேரத்தில் செலுத்தி விட்டால் அவர்களின் சிபில் ஸ்கோர் அதிகமாகும்.ஒருவேளை கால தாமதமாக கடனை செலுத்தினால் அவர்களின் சிபில் ஸ்கோர் குறையும்.இந்த தரவுகளை வைத்து தான் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோரை அறிந்துகொள்கின்றது.உங்களின் சிபில் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால் நீங்கள் கடன் பெற தகுதியானவர்கள் ஆவர்.

இந்நிலையில் உங்கள் சிபில் ஸ்கோரை அதிகரிக்க நீங்கள் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்றி வர வேண்டும்.நீங்கள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் செலுத்துகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி குறிப்பிட்ட விகிதத்தில் மட்டுமே செலவு செய்ய வேண்டும்.அது மட்டுமின்றி கிரெடிட் கார்டை சரியாக பராமரிக்க வேண்டும்.இதனால் உங்கள் சிபில் ஸ்கோர் அதிகமாகும்.

கிரெடிட் கார்டுகள் இருக்கின்றது என்ற தைரியத்தில் தேவையில்லாத செலவுகள் மேற்கொண்டால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும்.ஆகையால் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.