ஆண்,பெண் சந்திக்கும் பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.பொடுகு,தலை அரிப்பு,முடி வெடிப்பு,பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் அதிகளவு முடி உதிர்கிறது.எனவே வலுவிழந்த முடியை வலிமையாக மாற்ற ஆளி விதை,எள்,பூசணி விதை உள்ளிட்ட பொருட்களை கொண்டு தீர்வு காணலாம்.
தேவையான பொருட்கள்:-
1)ஆளி விதை – இரண்டு தேக்கரண்டி
2)எள் – நான்கு தேக்கரண்டி
3)ஏலக்காய் – ஒன்று
4)பூசணி சீட்ஸ் – ஒரு தேக்கரண்டி
5)கசகசா – அரை தேக்கரண்டி
6)வெல்லத் தூள் – மூன்று தேக்கரண்டி
7)நெய் – கால் தேக்கரண்டி
8)வெந்தயம் – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் நீங்கள் கருப்பு எள்ளை வாணலியில் கொட்டி கருகிடாமல் பக்குவமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு தட்டில் கொட்டி பேனில் ஆறவிடவும்.
அடுத்து ஆளிவிதையை வாணலியில் கொட்டி வறுக்க வேண்டும்.இந்த முறையில் பூசணி விதை,வெந்தயம் மற்றும் கசகசாவை வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் எள்,ஆளிவிதை,பூசணி விதை,வெந்தயம் மற்றும் கசகாவை நன்றாக ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மிக்சர் ஜாரை ஈரமில்லாமல் துடைத்து வறுத்த பொருட்களை கொட்டி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு தட்டில் கொட்டி பரப்பிவிட்டு சிறிது நேரம் ஆறவைக்க வேண்டும்.அடுத்து பாத்திரத்தில் வெல்லத் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி காய்ச்ச வேண்டும்.பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை இதில் கொட்டி கரண்டி கொண்டு கலந்துவிட வேண்டும்.
பிறகு கையில் நெய் தடவிக் கொண்டு தயாரித்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை தினம் இரண்டு என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு,முடி உதிர்தல் போன்ற பாதிப்புகளில் இருந்து மீண்டுவிடலாம்.
கருப்பு எள்ளை அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறலாம்.