உங்கள் வீட்டில் எறும்பு கரப்பான் பூச்சி தொல்லையா? இதோ இந்த சூப்பர் டிப்சை ஃபாலோ பண்ணி பாருங்க!
வீட்டில் நடமாடும் இந்த கரப்பான் பூச்சிகளின் தொல்லை நமக்கு எரிச்சலை ஏற்படுத்தும். எப்படிப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தை அடித்தாலும் ஒரு வாரம் தான் மீண்டும் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக உள்ளது. பார்க்கவே முகத்தை சுளிக்க வைக்க கூடிய இந்த கரப்பான் பூச்சி பொதுவாக சமையலறை மற்றும் குளியல் அறையில் அதிக அளவு காணப்படும் அருவருக்கத் தக்க இதைப் பார்த்தாலே அனைவரும் அலறி ஓடுவர்.
அதேபோல் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களிலும் எறும்பின் தொல்லை அதிகமாக காணப்படும்.
இவை இரண்டையும் விரட்டுவதற்கு ஒரு எளிய சூப்பர் டிப்ஸ்.
*** ஒரு கப்பில் ஏதேனும் ஷாம்பு இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வினிகர் அல்லது ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு சேர்த்துக் கொள்ளவும். கூடவே சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி எறும்பு மற்றும் கரப்பான் பூச்சியின் தொல்லை அதிகமாக உள்ள இடங்களில் ஸ்பிரே செய்து விடவும். இதனால் எறும்பு மற்றும் கரப்பான் பூச்சிகள் வாசனை தாங்காமல் இருந்து விடும் பிறகு அதனை சுத்தம் செய்த செய்து கொள்ளலாம்.
எனக்கு எறும்புகள் சாக வேண்டாம் வேறொரு இடத்திற்கு சென்றாலே போதும் என நினைப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாம்.
அதற்கு பூண்டு ஒரு பல் உரித்து எறும்பு மற்றும் கரப்பான் பூச்சி நடமாடும் இடங்களில் நன்கு அழுத்தி தேய்க்க வேண்டும். எங்கெல்லாம் கடப்பான் பூச்சி இடுக்குகளில் ஒழியக்கூடிய இடங்களோ! அங்கெல்லாம் பூண்டு பல்லை நன்கு அளித்து தேய்க்க வேண்டும். இதனால் ஏற்படும் பூண்டின் வாசனைக்கு எறும்புகள், கரப்பான் பூச்சிகள் வராது.
மேலும் சர்க்கரை டப்பாவில் ஒரு துண்டு கிராம்பை போட்டு வைக்கவும். இதனால் எறும்புகள் அறவே வராது.