உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் செயல்படுகின்றதா? டுவிட்டரை அடுத்து தற்போது இதுவுமா?
தற்போதுள்ள காலகட்டத்தில் எண்ணற்ற புதிய செயலிகள் வந்து விட்டது.இருப்பினும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் தான் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.மேலும் வாட்ஸ் அப் செயலியில் 30 நிமிடம் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஸ்டேடஸ் என பதிவேற்றம் செய்து அதனை நண்பர்கள் காணும் வசதியும் உள்ளது.அதுபோலவே இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் என்பதன் மூலம் போட்டோக்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளது.
மேலும் ஸ்டோரி என்ற பிரிவின் மூலம் முன்பு ஒரு நிமிடம் வீடியோவை பதிவேற்றம் செய்தால் அவை 15 வினாடி வீடியோவாக நான்கு பிரிவிகளாக பிரிந்து பதிவேற்றம் ஆகும்.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு குறிப்பிட்ட பயனர்களிடம் மட்டும் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.அதனையடுத்து அந்த பரிசோதனையின் முடிவில் ஒரு நிமிடம் வீடியோ பதிவேற்றம் செய்யும் வசதியை இன்ஸ்டாகிராம் வெளியிட்டது.அதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கடந்த ஒரு மணி நேரமாக எந்த ஒரு மெசேஜ் அனுப்ப முடியாமல் பயனர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.இதனையடுத்து பயனர்கள் டுவிட்டரில் புகார் அளித்து வருகின்றனர்.ஆனால் ஒரு சிலர் தங்களுடைய கணக்கில் அதுபோல பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இதுபோல பிரச்சனை நிலவி வரும் நிலையில் இன்ஸ்டா நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. உங்களுடை இன்ஸ்டாகிராம் பேஜ் வழக்கம் போல் இயங்குகின்றதா என பலரும் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.