நீங்கள் தூங்கும் பொழுது உங்கள் வாய் திறந்த நிலையில் உள்ளதா? இதோ உங்களுக்கான எச்சரிக்கை தகவல்!!
மனிதர்களுக்கு உறக்கம் மிகவும் முக்கியமான ஒன்று.நல்ல உறக்கத்தை அனுபவிக்கும் நபர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.மன அமைதி,நிம்மதி,மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
ஆனால் சிலர் இரவு நேரத்தில் மொபைல் பயன்படுத்துவது,படம் பார்ப்பது,எதிர்காலத்தை நினைத்து வருந்துவது போன்ற தூக்கத்தை கெடுக்க கூடிய செயல்களை செய்து வருவார்கள்.சிலருக்கு இரவில் குறட்டை விட்டு உறங்கும் பழக்கம் இருக்கும்.குறட்டை விடும் நபர்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் அவர்கள் நிம்மதியற்ற ஒரு உறக்கத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.
சிலர் வாயை திறந்த படி உறங்குவார்கள்.இது அவர்களின் ஆழ்ந்த தூக்கத்தின் வெளிப்பாடாகும்.ஆனால் இவ்வாறு தூங்குவதால் அவர்களுக்கு உடல்நல பிர்ச்சனை அதிகளவு ஏற்படும்.
வாயை திறந்தபடி தூங்குவதற்கு முக்கிய காரணம் முறையற்ற சுவாசம் தான்.இவ்வாறு தூங்குபவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.சளி,காய்ச்சல்,மூக்கடைப்பு போன்ற பாதிப்புகளால் அவதியடையும் பொழுது இவ்வாறான தூக்கம் வருகிறது.
வாய் திறந்தபடி தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள்:
இந்த பழக்கம் தொடர்ந்தால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.தொண்டை வறட்சி,வாய் துர்நாற்றம்,தலைவலி,உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
ஒரு சிலருக்கு இதய நோய் வர வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு வாய் திறந்தபடி தூங்குவது குறைவான தூக்கத்தின் அறிகுறி ஆகும்.இவ்வாறான தூக்கம் தொடர்ந்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.