சினிமாத் துறையில் முக்கிய பங்கு வகிப்பதில் இசைத்துறையும் ஒன்று. இன்றைய காலகட்டத்தில், சினிமா பாடல்களைத் தவிர பல ஆல்பம் சாங்குகள் வெளிவந்து டிரெண்டுகளை உருவாக்கி வருகின்றது. பல பட்டிங் இசையமைப்பாளர்கள் ஆல்பம் சாங்குகள் மூலம் பேமஸ் ஆகி சினிமாவில் இசையமைக்கவும், பாடவும் வாய்ப்பு கிடைக்கின்றது.
அந்த வகையில் பிரபல ரியாலிட்டி ஷோ மூலம் பல மக்களால் பார்க்கப்பட்டவர் கானா பாடகி இசைவாணி. தற்போது இவர் “ஐ அம் சாரி ஐயப்பா” என்ற ஐயப்பப் பாடல் ஒன்றைப் பாடி வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் சபரிமலை ஐயப்பனை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று இந்தப் பாடலைப் பாடிய பாடகி இசைவாணி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறநிலையத்துறையின் பதில் என்னவென்று செய்தியாளர்கள் அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்டபோது, அவர், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மக்களுக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் ஆட்சி செய்து வருகின்றார். எல்லா மதமும் ஒன்றுதான், ஒரு மதத்தினர் மற்ற மதத்தினரை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதை முதலமைச்சர் ஒரு காலமும் அனுமதிக்க மாட்டார்.
தற்போது இசைவாணி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆய்வு செய்ய வேண்டும். இந்தப் பாட்டில் தவறு இருந்தால் நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களைப் பிரிக்கின்ற எந்த ஒரு செயலையும் முதலமைச்சர் தலை தூக்க விடமாட்டார். சமத்துவமிக்க ஒரு இடமாகவே முதலமைச்சர் நம் மாநிலத்தை வைத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
ஆனால் இவ்வாறன புகார்கள் மீது தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன் வருவதில்லை. இதனை தவிர்த்து இதர பிரச்சனைகளை மிகவும் பெரியதளவில் எடுத்துக் செல்கிறது என நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர்.