“வெந்து தணிந்தது காடு… சிம்புவுக்கு காஸ்ட்லி கார கொடு…” ஐசரி கணேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.
சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தைத் திரையரங்குகளில் செப்டம்பர் 15 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மாநாடு வெற்றிப் படத்துக்கு பிறகு வெளியாகும் சிம்புவின் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார் போல படத்தின் வியாபாரமும் அதிகளவில் செய்யப்பட்டது. ஆனால் ரிலீஸூக்கு பின்னர் எதிர்பார்த்த அளவுக்கு படம் ரசிகர்களைக் கவரவில்லை. அதே நேரத்தில் மோசமான விமர்சனங்களும் இல்லை என்பதால் மோசமான வசூலும் இல்லை.
ஆனால் படக்குழுவினர் படத்தை மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் என்பது ப்ரமோட் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று படத்தின் வெற்றி விழாவை திரைத்துறையினரோடு கலந்துகொண்டனர். அப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாஅக அளித்தார். முன்னதாக இயக்குனர் கௌதம் மேனனுக்கு ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.