ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: மீண்டும் சென்னை அணிக்கு ஏமாற்றம்

0
212

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: மீண்டும் சென்னை அணிக்கு ஏமாற்றம்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் சென்னையின் எஃப்சி அணி இதுவரை ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த நிலையில் இன்று நடைபெற்ற ஒடிஷா அணிக்கு எதிரான போட்டியிலும் டிரா செய்தது. இதனால் கால்பந்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்,

சென்னையில் இன்று இரவு நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் சென்னையின் எஃப்சி அணியும் ஒடிசா எப்.சி. அணியும் மோதின. இந்த
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் 0-0 என சமனிலையில் இருந்தது

இதனையடுத்து 2வது பாதியின் 51 மற்றும் 71வது நிமிடங்களில் சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒடிசா அணி வீரர்களும் 54வது நிமிடத்திலும், 82 வது நிமிடத்திலும் கோல்கள் அடித்து சமன் செய்தனர்.

இதனால் ஆட்ட நேர முடிவின்போது இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டியிருந்ததால் 2-2 என சமனில் முடிந்தது. சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்வி, 2 டிஆ என 5 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleஇலங்கையில் தமிழர்களின் நிலை பூஜ்யம்: அதிர்ச்சி தகவல்
Next articleஅவதூறு வழக்கு தொடருவதாக கூறிய ஆர்.எஸ்.பாரதி எங்கே? விரட்டி விரட்டி அசிங்கப்படுத்தும் பாமகவினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here