ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

0
224

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையின் எப்.சி அணிக்கு நேற்று முதல் வெற்றி கிடைத்தது.

நேற்றைய போட்டியில் சென்னை அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக மோதினர். எப்படியும் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறி அவர்களது விளையாட்டில் தெரிந்தது. இருந்தும் சென்னை வீரர்கள் கோல் போட எடுத்த 7 முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் முதல் பாதியில் 0-0 என்ற கணக்கில் இருந்தது

இந்த நிலையில் போட்டியின் 90+2வது நிமிடத்தில் சென்னை வீரர் ஒரு போல் போட, அதனை அடுத்து 90+5வது நிமிடத்தில் ஐதராபாத் ஒரு கோல் போட்டதால் மீண்டும் சமநிலை பெற்றது. இந்த நிலையில் 90+6வது நிமிடத்தில் சென்னை அணி மீண்டும் ஒரு கோல் போட்டதால் 2-1 என்ற கோல்கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது

சென்னை அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியும் இரண்டில் டிராவும் ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. நேற்று போட்டி தொடங்கும் வரை சென்னை அணி கடைசி இடத்தில் அதாவது 10வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் வெற்றியின் மூலம் 10வது இடத்தில் இருந்த சென்னை அணி தற்போது 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா, பெங்களூரு, கோவா, நார்த் ஈஸ்ட் யூனிடெட், ஜாம்ஷெட்பூர் ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை
Next articleசபரிமலைக்கு வந்த பெண்களை பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய பக்தர்கள்: பெரும் பரபரப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here