தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மதுபான கடைகளின் இணைப்பாக செயல்பட்டுவரும் பார்களையும் சுமார் 6 மாதங்களுக்குள் மூட வேண்டுமென்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது .இதற்கு வரவேற்பு வழங்கும் விதத்தில் உரையாற்றியிருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்ற 1719 பார்களை உடனடியாக மூட வேண்டும் என்றும், மீதமிருக்கின்ற பார்களை 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் எனவும், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பாகுமென தெரிவித்திருக்கிறார்.
2019ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரையில் பார்களை ஏலமெடுத்த ஒப்பந்ததாரர்கள் ஊரடங்கு சமயங்களில் பார்களை நடத்த இயலாமல் போனதால் தங்களுக்கான ஒப்பந்த கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்த நீதிபதி பார்களை நடத்த டாஸ்மாக்குக்கு அனுமதியில்லையென தெரிவித்து தீர்ப்பு வழங்கினார். மதுவிலக்கு சட்டம் 47 பிரிவின்படி ஒருவர் குடித்துவிட்டு பொது இடங்களில் நடமாடினால் அவருக்கு 1000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது 2ம் சேர்த்து வழங்கப்படும் என கூறியிருக்கிறார்.
திருவள்ளுவரின் பெருமையையும், அவருடைய அறிவையும், போற்றும் தமிழ்நாடு அவரால் எழுதப்பட்ட கள்ளுண்ணாமையை மறந்தது ஏன்? என்று எனக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டில் தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கொண்டுவரப்பட்டிருக்கின்ற திருத்தங்களை போல மது விவகாரத்திலும் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
மது வணிகத்தின் மூலமாக வரும் வருமானத்தை முதன்மையாகக் கொண்டு ஒரு மாநில அரசு செயல்படுவது வெட்கக்கேடான ஒரு செயல் என்று விமர்சனம் செய்திருக்கிறார் நீதிபதி. வருமானத்தை பெருக்க பல்வேறு வழிகள் இருக்கிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை பாட்டாளி மக்கள் கட்சி 2018 ஆம் வருடம் வெளியிட்டிருக்கிறது.
ஆகவே சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 3229 பார்களுக்கு புதிய உரிமம் வழங்குவதற்காக கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் அனைத்தும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என கூறியிருக்கிறார் அன்புமணி.
3719 பார்களையும் உடனடியாக மூடப்பட வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பின்படி செயல்பட்டு வரும் மீதம் இருக்கின்ற பார்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் மூடப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.