மாநில அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! அதிர்ச்சியின் உச்சத்தில் அரசு ஊழியர்கள்!

0
93

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நோய்த்தொற்று பரவல் நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் இந்த நோய்த்தொற்றை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்துவது சிரமம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறையாக 14 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதன்காரணமாக, ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுத்துக் கொள்ள முடிந்தது.

ஆனாலும் நோய் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விடுமுறை வழிகாட்டுதல்களை ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை மாற்றியமைத்திருக்கிறது.

அதனடிப்படையில், இனி அரசு ஊழியர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் காய்ச்சல் 7 நாட்களுக்கு மேல் நீடித்திருந்தால் போதுமான மருத்துவ சான்றிதழ்களை காட்டி விட்டு அதன் பிறகு மட்டுமே ஊழியர்களுக்கான விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அத்தோடு மட்டுமல்லாமல் உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே இந்த புதிய உத்தரவு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்துத்துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.