எகிறும் பெட்ரோல் டீசல் விலை! கவலையடைந்த வாகன ஓட்டிகள்!

Photo of author

By Sakthi

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக்கொண்டே சென்ற காரணத்தால், தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து சுமார் ஒரு மாத காலத்தை தாண்டிவிட்ட நிலையிலும் கூட இன்றுவரையில் அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் அல்லது அறிவிப்போ அவர் வெளியிடவில்லை இதன் காரணமாக, பொது மக்கள் எல்லோரும் அவர் மீது கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆன இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால் ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்த எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக உயர்த்தி வருகின்றன.

இப்படியான சூழ்நிலையில், சென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 80 காசுக்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 92 ரூபாய் 89 காசுக்கும் விற்பனையாகி வருகின்றது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.