Syria war: சிரியா மீது 480 ஏவுகணை ஏவி தாக்குதலை நடத்தும் இஸ்ரேல்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சி காலகட்டத்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஏலத் தொடங்கினார்கள். அதன் பிறகு 13 ஆண்டுகள் தொடர் உள்நாட்டு போர் சிரியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினார்கள். இதனால் அச்சத்தில் அதிபர் பஷர் அல் அசாத் ரஷ்யா நாட்டிற்கு தப்பி சென்று விட்டார்.
அங்கு அவர் பத்திரமாக இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்து வருகிறது. எனவே சரியா நாட்டினை முழுவதும் கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அதிபர் அட்சி காலத்தில் அகதிகளாக சென்ற சிரியா நாட்டு மக்கள் தற்போது நாடு திரும்பி இருக்கிறார்கள். அதிபருக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற தொடங்கி இருக்கிறார்கள்.
சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் உதவி செய்து வருகிறது. சிரியாவில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை பயன்படுத்தி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் கோல்டன் ஹைட்ஸ் பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது.
அதற்காக கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 480 ஏவுகணைகளை ஏவி இருக்கிறது. ஆனால் சிரியா நாட்டின் பல பகுதி அழிந்து இருக்கிறது. இது இஸ்ரேல் லெபனான் மற்றும் ஈரானுடன் போர் நடத்தி வருவதால் ஈரானுக்கு போர் உதவி செய் வாய்ப்பு உள்ள சிரியா மீது போர் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.