இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் திரு சிவனுக்கு சர்வதேச விருது!

Photo of author

By Parthipan K

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவரான திரு சிவனுக்கு வோன் கார்மான் விருது கிடைத்துள்ளது.

இவர் கன்னியாகுமரி அருகே உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர்.தமிழ் வழிக்கல்வியில் பயின்ற இவர் தற்பொழுது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முக்கியமன பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில் இவருக்கு உலக அளவில் சிறந்த விருதான வோன் கார்மான் விருதிற்காக இவர் தேர்வு செய்யபட்டுள்ளார்.மேலும் 2020 ஆம் ஆண்டு இந்த விருதை பெரும் மூன்றாவது இந்தியர் ஆவார்.இவர் இதற்கு முன் டாக்டர் விக்ரம் சாரா பாய் ஆய்வு விருது,ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் பிஎஸ்எல்வி ராக்கெட் மற்றும் சந்திராயன் 2 ஆகிய திட்ட பணிகளில் செயல்பட்டுள்ளார்.இந்த வோன் கார்மான் விருதானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெறவிருக்கும் விழாவில் இவருக்கு வழங்கப்படும் என இன்டர்நேஷனல் அகடமி ஆஃ ஏரோநாட்டிக்ஸ் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தை சேர்ந்த இவருக்கு இந்த விருது கிடைப்பதால் பல்வேறு துறையிலிருந்து பிரபலங்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.