ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சுக்கு நூறாக்கிய ட்ரம்ப்!! அல்லல் படப்போகும் இந்தியர்கள்!!

Donald Trump: அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப வந்த பிறகு வரி ரீதியாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்தனர். ஏனென்றால் இவர் வாக்கு சேகரிக்கும் போதே, ஒரு சில நாடுகள் விசா இல்லாமல் மக்களை உள் நுழைத்து உற்பத்தி துறையை தொடங்கி விடுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவிற்கு வரவிடாமல் திருடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இவர் தலைமை பொறுப்பை ஏற்றதும், வரிவிகிதத்தை ஏற்றினால் உற்பத்தியை நமது நாட்டிலேயே தொடங்கிவிடுவார்கள் என்று மனக்கணக்கு போட்டு இறக்குமதி வரியை ஏற்றி உத்தரவிட்டுள்ளார். இது இந்தியாவின் ஐடி மட்டும் ஸ்டார்ட்டப்  நிறுவனங்களுக்கு பெரும் அடி எனக் கூறுகின்றனர். அதாவது அமெரிக்கா சமீபத்தில் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

இதனால் எந்த ஒரு பணத்தையும் வெளிநாடுகளுக்கு தருவதில்லை. அவர்களே வைத்துக் கொள்கின்றனர். தற்சமயம் வரி ஏய்ப்பு செய்ததால் அமெரிக்காவில் கட்டாயம் பொருள்களின் விலைவாசியும் உயரக்கூடும். அந்த சூழ்நிலை கட்டாயம் வட்டி விகிதமானது குறைய வாய்ப்பே இல்லை. மாறாக வட்டி விகிதம் அதிகரிக்க தான் கூடும், அப்படி இருக்கும்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அமெரிக்காவால் பணம் தர முடியாது. ஐடி போன்றவை பெரும் பாதிப்பை சந்திக்க கூடும்.

டிரம்பின் வரி விதிப்பு இந்தியாவில் டெக்ஸ்டைல் மற்றும் ஃபார்மாத்துறைக்கு எந்த ஒரு பாதிப்பையும் விளைவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் உற்பத்தி திறன் பங்கு குறைந்து வருவதால் ட்ரம்ப் இப்படியான முடிவை எடுத்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இந்த திட்டம் காலப்போக்கில் கை கொடுக்காது எனவும் கூறுகின்றனர்.