சென்னை வரும் அமித்ஷா!. அதிமுகவினரிடம் வருமான வரித்துறை ரெய்டு!. கூட்டணிக்கு அழுத்தமா?!..

0
102
eps
eps

பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்ததோ அப்போதே தங்களின் காரியங்களை சாதிக்க வருமான வரித்துறையை பயன்படுத்த துவங்கினார்கள். தங்களுடன் கூட்டணியில் சேராதவர்கள், எதிர்த்து பேசுபவர்கள், அரசியல்ரீதியாக குடைச்சல் கொடுப்பவர்கள் என பலரையும் டார்கெட் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி விடுகிறார்கள்.

நடிகர் விஜய் மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி ஒரு வசனம் பேசிவிட்டார் என்பதற்காக நெய்வேலியில் மாஸ்டர் படத்தில் நடித்துகொண்டிருந்த போது ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே போய் அவரை காரில் அழைத்து சென்று விசாரித்தார்கள். இப்படிப்பட்ட சம்பவங்களினால்தான் நாமும் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற முடிவை எடுத்தார் விஜய்.

ஒருபக்கம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. பாஜகவின் தேசிய ஜனநாயாக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வரவேண்டும் என அமித்ஷா நினைக்கிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளோடு பாஜகவும் சேர்ந்தால் திமுகவை தோற்கடிக்க முடியும் என பாஜக கருதுகிறது.

eps

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிய பழனிச்சாமி அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான், இன்று இரவு சென்னை வந்த அமித்ஷா நாளை தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள்டைம் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

ஒருபக்கம், அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் சந்திரசேகர் மற்றும் செய்யாதுரைக்கு தொடர்புடைய 40 இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில், 500 கோடி அளவில் கணக்கில் வராத வருமானம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமித்ஷா சென்னையில் உள்ள நிலையி இது கூட்டணியில் சேர அதிமுகவுக்கு பாஜக கொடுக்கும் அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது.

Previous articleநீங்க கேள்வி கேட்க வேண்டியது பாஜகவை.. திமுகவை அல்ல.. விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!..
Next articleவரி விதிப்பு விவகாரத்தில் டஃப் கொடுக்கும் சீனா!.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்!…