பூவெல்லாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக நுழைந்தவர் சோனா. நடிகையாக பல படங்களில் பயணித்த பின்பு தயாரிப்பாளராக நினைத்து அதில் தோல்வியை சந்தித்த பின் மீண்டும் நடிகையாகவே பயணத்தை தொடர்ந்தார்.
இவருடைய வெப் சீரிஸ் ஒன்று தற்பொழுது வெளியிடப்பட இருப்பதாலும் அதிலும் குறிப்பாக தன்னுடைய பயோபிக் கதையை தான் இந்த வெப் சீரியஸாக ஸ்மோக் என்ற பெயரிட்டு வெளியிட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த வெப் சீரிஸ்னுடைய பிரமோஷனுகாக கலந்து கொண்ட நடிகை சோனா அவர்கள் பல்வேறு விதமான கேள்விகளை எதிர் கொண்டு அதற்கான பதில்களை தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக நடிகர் வடிவேலு குறித்து கேட்டதற்கு அனைவரும் முகம் சுளிக்கும் விதமாக அவர் அளித்த பதில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
வடிவேலு குறித்து நடிகை சோனா அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
நடிகர் வடிவேலுவுடன் நடிப்பதற்கு பதிலாக என்னை பிச்சை எடுக்க சொன்னால் கூட நான் பிச்சை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருடன் என்னால் நடிக்க முடியாது என்றும் விரத்தியுடன் கூறி இருக்கிறார் நடிகை சோனா. மேலும் நடிகர்கள் வடிவேலுவுடன் தான் ஒரு படத்தில் நடித்த பின்பு அவருடன் மீண்டும் நடிப்பதற்காக தொடர்ந்து 12 படங்களில் வாய்ப்புகள் வந்ததாகவும் அவற்றை முழுவதுமாக தான் உதறி தள்ளி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சினிமா வாழ்க்கையில் இப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கத்தான் வேண்டும் என்றும் இருந்தாலும் நடிகர் வடிவேலு குறித்து யாரிடம் கேட்டாலும் அனைவரும் கழுவி கழுவி ஊற்றத்தான் செய்வார் என்று குறிப்பிட்டு இருக்கிறார். திரைப்படங்களை தொடர்ந்து டிவி சீரியல்களிலும் நடிகை சோனா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.