6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இம்மாதம் ஆண்டு இறுதி தேர்வு!!
கடும் வெயில் காரணமாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை வரும் 11ம் தேதியிலிருந்து துவக்கி ஒரு வாரத்தில் முடிப்பதற்கு கல்வித் துறை ஏற்பாடு செய்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் ஆறு முதல் , ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இம்மாதம் 24 ஆம் தேதி துவங்கி, மாத இறுதிவரை ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
வெயில் காரணமாக தற்போது தேர்வுகளை முன்கூட்டியே நடத்த கல்வித் துறை ஏற்பாடு செய்திருக்கிறது.அதன்படி வரும் 11ஆம் தேதியிலிருந்து தேர்வுகள் துவங்குகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தேதியில் இந்த தேர்வுகள் துவங்கி, ஒரு வாரத்தில் முடிவடையும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அட்டவணையை வெளியிட்டுள்ளனர் திருவள்ளூர் மாவட்டத்தில் 11ஆம் தேதி துவங்கி, 24 ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. சென்னை மாவட்டத்தில் வரும் 18ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என தெரிகிறது.