ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை!!  5000 பேர் மாயம்!!
காங்கோ நாட்டில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 5000 மக்களின் நிலைமை என்ன ஆனதென்று தெரியாமல் இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக காங்கோ நாட்டின், கிழக்கு பகுதியில் இருக்கும் தெற்கு கிவு மாகாணத்தில், கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் சிக்கி இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும் 5000க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது.
காங்கோ நாட்டில் பெய்து வரும் கனமழை ஏற்படுத்திய பாதிப்புகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
        
