அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை கொடுத்து வருகிறார். வரியை நீங்கள் உயர்த்தும் பட்சத்தில் அதற்குரிய விளைவை சந்திக்க நேரிடும் என்று கூறினார். அதேபோல தற்பொழுது 5 துறைகளுக்கு கடுமையான வரியை விதிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் முதலாவதாக எலக்ட்ரானிக் ஐட்டம்ஸ், இரண்டாவதாக நகை மற்றும் ரத்தின கற்கள் மூன்றாவதாக மருத்துவத்துறை நான்காவதாக கார் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஐந்தாவதாக டெக்ஸ்டைல் துறை இவை அனைத்திலும் 10% அதிகமான வரி ஏய்ப்பு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் எனக் கூறியுள்ளனர். அப்படி மருத்துவத் துறையில் வரி அதிகரிப்பு செய்தால் 50% அமெரிக்காவில் இறக்குமதி செய்வது நம்முடைய மருந்துகள் தான். அப்படி இருக்கும் பட்சத்தில் இது பெரும் இழப்பை சந்திக்கும். டிரம்ப் விதிக்கும் இந்த வரியால் ஒவ்வொரு மருந்தின் விலையும் அதிகரிக்க தொடங்கும். மேற்கொண்டு இது ரீதியாக நடத்திய ஆய்வில் 10% இருக்கும் கீழ் வரி விதிக்கும் பட்சத்தில் சமாளிக்க முடியும் என்றும் அதற்கு மேல் வரிவிதித்தால் கட்டாயம் மருத்துவத்துறையில் பெருமளவு இழப்பீடு சந்திக்க நேரிடும் என கூறியுள்ளனர்.
இரண்டாவதாக மின்னணு சாதனங்களில் வரி ஏய்ப்பு:
நமது இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 32 சதவீதம் அளவில் மின்னணு சாதன பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்பொழுது வரி அதிகரிக்கும் பட்சத்தில் அமெரிக்கா இந்தியா இறக்குமதியை தவிர்த்து விட்டு ஜப்பான், சீனா தயாரிப்பு இறக்குமதிகளுக்கு அனுமதி அளித்து விடும். அந்த வகையில் மின்னணு சாதன ரீதியாக வேலை இழப்பும் ஏற்படும்.
அதேபோல நகை இறக்குமதியிலும் 30 சதவீதம் இந்தியாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது இதனையும் அமெரிக்கா தவிர்த்து விட்டு சிங்கப்பூர் ஓமன் போன்ற நாடுகளிலிருந்து நகையை வாங்க ஆரம்பித்து விடும். இதனால், நகை தயாரிப்பாளர்கள் என தொடங்கி பெரும் வேலை இழப்பை சந்திக்க கூடும். இதேபோல கார் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரித்தல், ஆடைகள் உற்பத்தி துறை என அனைத்தும் பெருமளவில் அடிவாங்க கூடும் எனக் கூறுகின்றனர். இது ரீதியாக இன்று அறிவிப்பு வெளிவரும் பட்சத்தில் அதனை வைத்து எதில் முதலீடு செய்யலாம் என முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.