OPS: அதிமுகவின் முக்கிய நபராக விளங்கியவர் பன்னீர்செல்வம். இவர் ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது கூட முதல்வராக இருந்தவர். அவரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் இவருக்கு முதல்வர் பதவி வந்தாலும் பல காரணங்களால் அதனை தொடர முடியவில்லை. பின்பு இரட்டை தலைமை என்று எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவரின் கீழ் கட்சியானது செயல்பட்டு வந்தது. நிர்வாகிகள் பலரும் ஒற்றை தலைமை வேண்டுமென கூறினர். இதன்பிறகு ஒருமித்தமாக எடப்பாடியை தேர்வு செய்தனர். பொதுச் செயலாளர் இணை பொது செயலாளர் என்று எடப்பாடி மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் முக்கிய பதவியும் கொடுக்கப்பட்டது.
நாளடைவில் பாஜகவுடன் கூட்டணியை வைத்துக்கொண்டு ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். அதன் விளைவு கட்சியை விட்டு நீக்கம் செய்ய வைத்தது. மீண்டும் கட்சியை தன் வசப்படுத்த பலமுறை போராடியும் அனைத்தும் எடப்பாடி பக்கத்திற்கே சாதகமாக அமைந்தது. இப்படி இருக்கும் சூழலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அப்போதாவது தனக்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்குமென வெகுவாக காத்திருந்தார். அதேபோல அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆரம்ப கட்டத்தில் எடப்பாடி ஒத்து வராத நிலையில் ஓபிஎஸ் வைத்து அதிமுகவை கூட்டணியில் இழுத்துக் கொள்ளலாம் என்று பாஜக நினைத்திருந்தது. ஆனால் அந்தத் திட்டமெல்லாம் தவிடு பொடியாகும் வகையில் எடப்பாடி மீண்டும் கூட்டணிக்கு ஒத்துக் கொண்டார். ஆனால் அதில் சில வரைமுறைகள் வகுத்துள்ளார். அதில் முக்கியமாக இருப்பதே கூட்டணி பிரச்சனையில் தலையிடக்கூடாது என்பதுதான், அதன்படி ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் வாய்ப்பு கேட்டபோது உட்கட்சி பிரச்சினைகளில் தலையிட முடியாது என்று அமித்ஷா கூறிவிட்டார். இதனால் பன்னீர்செல்வம் தனி கட்சி அமைத்து பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாக கூறுகின்றனர்.