ADMK TVK : அதிமுக மற்றும் தவெக கூட்டணி கட்டாயம் அமைந்துவிடும் என பெரும்பாலான நிர்வாகிகள் நினைத்து வந்தனர். ஆனால் அதனை தவிடு பொடியாக்கும் விதத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க டெல்லி சென்று அமித்ஷா – வை சந்தித்து எடப்பாடி சம்மதம் தெரிவித்து வந்துள்ளார். இது ரீதியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் அரசல் புரசலான தகவல்கள் கசிந்துள்ளது. முதலில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்று எடப்பாடி யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக அந்த பேச்சுவார்த்தையில் அதிகப்படியான சீட் ஒதுக்க வேண்டுமென கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி எங்கள் தலைமையில் தான் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் எடப்பாடிக்கு ஒத்துவரவில்லை. அதுமட்டுமின்றி புதிதாக வந்த கட்சிக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டுமென அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனையெல்லாம் வைத்து தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியானது.
அதேபோல விஜய் கட்சி சார்பாகவும், அதிமுகவுடன் எங்களை ஒப்பிட்டு பேசாதீர்கள் என்ற அறிக்கையையும் வெளியிட்டனர். ஆனால் அதனையும் மீறி மீண்டும் இவர்கள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தான் கூறினர். ஒரு பக்கம் சீமானின் ஆதரவை விஜய் எதிர்பார்ப்பது போல் அதிமுகவும் கூட்டணியில் வந்து விட்டால் நன்றாக இருக்கும் என கணக்கீட்டு வந்தார். ஆனால் விஜய்க்கு அதிருப்தி ஏற்படும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி தலைமைக்கு சென்று பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை . மேற்கொண்டு விஜய் சீமான் கூட்டணியையோ அல்லது பாமக கூட்டணியையோ எதிர்பார்க்கும் சூழல் உண்டாகியுள்ளது.