DMK: திமுக அமைச்சர்கள் தங்கள் பேச்சுனாலையே தலைமைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அந்த வகையில் அமைச்சர் பொன்முடி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இலவச பேருந்து பயணத்தை ஓசி பஸ் என்று கூறி அதில் தானே நீங்கள் செல்கிறீர்கள் என்று பெண்களை நேரடியாக வசை பாடினார். இதனால் தமிழகமெங்கும் கண்டனங்கள் எழுந்தது. அதேபோல தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி சைவம் வைணவம் எனக் கூறி விலைமாது பெண்களை குறித்து மிகவும் கொச்சையாக பேசியுள்ளார்.
இவர் பேசிய இந்த வீடியோவால் தமிழக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஸ்டாலினுக்கு அழுத்தம் கிளம்பியுள்ளது. இவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்குங்கள் இப்படிப்பட்டவர் கட்சியிலிருப்பது அவகேடு என்று கூறுகின்றனர். இவர் கட்சியை சேர்ந்த கனிமொழி உள்ளிட்டோரும் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் ஓ பன்னீர்செல்வம் இது ரீதியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இப்படி கொச்சையாக பேசுபவரை அமைச்சர் பதவியில் வைத்திருப்பது பெண்களுக்கு செய்யும் துரோகம் உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பொன்முடி நான் தடுமாற்றத்துடன் அவ்வாறு பேசி விட்டேன் அதனால் தற்போது வருந்துகிறேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மனப்பூர்வமாக கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.