பிகில் படம் 300 கோடி வசூலை பெற்றது என்பது வடிகட்டின பொய்!! சர்ச்சையை கிளப்பும் திரையரங்கு உரிமையாளர்!!

0
77
It is a filtered lie that Bikil movie has grossed Rs 300 crore !! Controversial theater owner !!
It is a filtered lie that Bikil movie has grossed Rs 300 crore !! Controversial theater owner !!

பிகில் படம் 300 கோடி வசூலை பெற்றது என்பது வடிகட்டின பொய்!! சர்ச்சையை கிளப்பும் திரையரங்கு உரிமையாளர்!!

விஜய் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது பத்து வயதில் இருந்தே திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார். தனது தந்தை இயக்கிய இது எங்க நீதி திரைப்படம் வரை குழந்தை நடிகராக தொடர்ந்து நடித்தார். பின்னர் தனது பதினெட்டாம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கத்தில் உருவான பூவே உனக்காக திரைப்படம் தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

மேலும் இவர் இன்று வரை 62 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மேலும் இவர் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோ பாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சினிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். மேலும் ஒரு முறை ஐக்கியம் பேரரரசின் நாட்டு திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

மேலும் இவரின் ரசிகர்கள் அவரை இளைய தளபதி என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். புலம் பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, ஜப்பான், ஐக்கிய மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் 80 நாடுகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படம் பிகில். இத் திரைப்படமானது விளையாட்டினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது இதனை இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. இதில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் இத்திரைப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு ஜோடியாக நயன்தாரா கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளர். மேலும் இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் பொதுவாகவே நடிகர் விஜய்யின் திரைப்படம் வெளியானால் அதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். அதுப்போல் இப்படத்தையும் மிகவும் ரசித்து வந்தனர்.

மேலும் இத்திரைப்படம் 300 கோடி வசூலை எட்டியது என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று திரையரங்கு உரிமையாளர் ஒருவர் புதிய சர்ச்சையை கிளப்பி வருகிறார். 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி வசூலை எட்டியது என்ற தகவலை வடிகட்டின பொய் என்று திருச்சியை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இப்படம் வெறும் 130 கோடி வசூலை மட்டுமே எட்டியது. மேலும் பெரிய நடிகர்களின் படங்கள் குறித்து வரும் வசூல் செய்தி எதுவும் உண்மை கிடையாது. சிலர் மட்டுமே உண்மையான வசூலை வெளியிடுகின்றனர் என கூறியுள்ளார். இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் சற்று கோபத்தில் உள்ளனர்.

author avatar
CineDesk