எல்லாமே நாடகம் போட்டு உடைத்த நிர்வாகி! அதிர்ச்சியில் ரஜினி!

Photo of author

By Sakthi

ரஜினிகாந்த் மக்கள் மன்ற கன்னியாகுமரி மாவட்டத் துணைச் செயலாளர் ஆர். எஸ் ராஜன் போன்றோர் மன்றத்தை விட்டு நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், ஆர் எஸ் ராஜன் ரஜினிகாந்த் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

அவர் தெரிவித்ததாவது ரஜினிகாந்த் என்னை மட்டும் ஏமாற்றவில்லை அவருடைய ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் எந்திரன் திரைப்படத்தை சுமார் 800 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தார் என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

அதோடு ரஜினிகாந்த் உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்தது எல்லாம் வெறும் நாடகம் என்று தெரிவித்து இருக்கிறார் நாடகமாடி மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் என்றும் அவர் ரஜினிகாந்தை விமர்சனம் செய்திருக்கிறார்.

ரஜினிகாந்த் சென்ற மூன்று வருடங்களில் அவருடைய பெயரில் ரூபாய் 13 வருடத்திற்கு நற்பணிகள் செய்து இருப்பதாகவும், அதன் காரணமாக,வழக்கு தொடர இருப்பதாகவும் ராஜன் தெரிவித்திருக்கிறார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட இன்னொரு நிர்வாகியான சதீஷ்பாபு தான் நீக்கப்பட்டதற்கு சரியான விளக்கம் கொடுக்கவில்லை என்றால் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தீ குளிப்பேன் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.