18 வயதிற்குள் இருப்பவர்கள் திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!
கொரோனா தொற்று காரணமாக புகழ்பெற்ற கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது.தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்து காணப்படுகிறது.அதனால் மீண்டும் கோவில்கள் அனைத்தும் படிப்படியாக திறந்து வருகின்றனர்.அந்தவகையில் திருப்பதி தற்போது திறக்கப்பட்டுள்ளது. முதலில் திருப்பதியில் அங்குள்ள உள்ளூர் பக்தர்களை தவிர இதர மாநிலம் சேர்ந்த மக்கள் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்திருந்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பு சற்று குறைந்ததால் கடந்த 20 ம் தேதி முதல் அனைத்து மாநில மக்களும் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதுமட்டுமின்றி இலவச தரிசனத்தில் மக்கள் இரவு 11 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி அளித்தனர். திருப்பது கோவிலுக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட்டை புக் செய்யும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திருப்பதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என கூறினர். அது இல்லையென்றால் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி கடந்த மாதம் 25 ம் தேதி வரை பக்தர்கள் ஆன்லைனில் ப்ரீ டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.மேலும் 24ம் தேதி காலை 9 மணிக்கு மேல் ரூ.300 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட்டுக்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என கூறினர்.
அதனையடுத்து தற்போது 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வரவில்லை.அதனால் 18 வயதிற்கு உட்பட்டவராக இருப்பவர்கள் கட்டாயம் கொரோனா நெகடிவ் சான்றிதல் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது,அதுமட்டுமின்றி இந்த சான்றிதல் தேவஸ்தானத்திற்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன் எடுத்ததாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.அதேபோல வரும் 7 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.பிரம்மோற்சவ விழாவில் ஆந்திர முதல்வர் கலந்துக்கொண்டு பெருமாளுக்கு பட்டு அங்கவஸ்திரம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.மேலும் அவர் ஹந்தி,கன்னடம் போன்ற மொழிகளில் உள்ள தொலைகாட்சி சேனலை தொடங்க உள்ளார்.மேலும் 22 வது ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு போன்றவற்றில் கலந்து கொள்ள உள்ளார்.அதேபோல இலவச தரிசன டிக்கெட்டுக்கள் கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கொரோனா தொற்றானது சற்று குறைந்தவுடன் மீண்டும் கவுண்டர்களில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் கூறியுள்ளனர்.