கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் பற்றி பேசாமல் இருப்பது ஆபத்து! கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சனம்

Photo of author

By Anand

கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் பற்றி பேசாமல் இருப்பது ஆபத்து! கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சனம்

இந்து மதத்தை வைத்து அரசியல் செய்யும் இந்து சங்கிகளை தொடர்ந்து விமர்சிப்பவர்கள் கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் பற்றி பேசாமல் இருப்பது ஆபத்து என கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சித்துள்ளார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

ஆண்டவரின் பெயரால்..!
திருக்காட்டுப்பள்ளியில் புனித இருதய மேல்நிலை பள்ளியில் படித்த லாவண்யா என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாறுமாற வற்புறுத்தியதால் மன உளைச்சலில் அவர் விசம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த மாணவி பேசும் காணொளியைப் பார்த்தேன்.
வழக்கமா சங்கிகள் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்று பேசும்போதெல்லாம் நான் அதை நம்பியதில்லை. மதம்மாறுவது அவரவர் விருப்பம் என்றே நினைப்பேன். விருப்பப்படும் யாரும் எந்த மதத்தையும் எந்த கடவுளையும் வழிபடும் உரிமை கொண்டவராக இருக்க வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு.
ஆனால் கல்வியைக் காட்டி ஒரு குழந்தையை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தி இறுதியில் அந்த குழந்தை தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்கு தள்ளுவது அதிர்ச்சியளிக்கிறது.
இப்போது உங்கள் ஆண்டவர் மகிழ்வாரா. ஜனநாயகத்தை நேசிக்கும் நாம்,
பொதுவாக இந்துத்துவ சங்கிகளின் அயோக்கியத்தனத்தை மட்டுமே பேசுபொருளாக கொண்டிருக்கிறோம்..
ஆனால் களத்தில் மறைமுகமாக பரவிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் குறித்து பேசாமல் கடந்து செல்கிறோம். இது மிக ஆபத்தானது.
இந்த கொலைச் செய்தி தமிழ்நாட்டு ஊடகங்களில் ஏன் பிரேக்கிங் செய்திகளாகவும் விவாதப்பொருளாகவும் மாறவில்லை..
அரசியல் சிந்தாந்த நிலைப்பாடுகளையெல்லாம் கடந்து இதுபோன்ற அயோக்கியத்தனங்களை கண்டிக்கவும், பொதுத்தளத்தில் அம்பலப்படுத்தவும் பழகுங்கள் நண்பர்களே.
மாணவி லாவன்யாவின் மரணத்திற்கு காரணமான கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் அனைவரையும் தமிழ்நாடு அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டவரே இந்த கொலைகாரப் பாவிகளை மன்னிக்காதீரும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.