தினமும் காலையில் இதனை  சாப்பிட்டு வந்தால் போதும்!!  ஆய்சுக்கும் எந்த நோய்களும் உங்களை எட்டிப் பார்க்காது!! 

0
91

தினமும் காலையில் இதனை  சாப்பிட்டு வந்தால் போதும்!!  ஆய்சுக்கும் எந்த நோய்களும் உங்களை எட்டிப் பார்க்காது!!

நாம் அனைவரும் காலையில் எழுந்து வேக வேகமாக புறப்பட்டு பள்ளிக்கு ஆபீஸுக்கு சென்று விடுகிறோம். இதனால் நமக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில்லை. காலை நேர உணவு நாம் ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுக்க ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் இருக்க முடியும். ஆனால் இந்த காலகட்டத்தில் காலை உணவை நாம் தவிர்த்து வருகிறோம். பொதுவாக காலை உணவு மதிய உணவு மற்றும் இரவு உணவு என்று சாப்பிடுவோம். ஆனால் காலை உணவு நாம் ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் காலையில் பழங்களை சாப்பிடுவதால் எளிதாக ஜீரணமாகிறது. அது மட்டுமின்றி நமக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் நமக்கு தருகிறது. ஒவ்வொரு பழங்களிலும் தேவையான பைட்டோ நியூட்ரியண்ட், விட்டமின், நார்ச்சத்துக்கள் இதுபோன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் நமக்கு தருகிறது.

தினமும் காலையில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான 5 பொருட்கள்

1.பப்பாளி

விட்டமின் ஏ, சி, மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. பப்பாளி மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் வெறும் வயிற்றில் பப்பாளி எடுத்துக் கொண்டால் கல்லடைப்பு பிரச்சனை குணமாகும்.

2.இரவு ஊற வைத்த பாதாம்

பாதாமில் புரதம் மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் காலையில் பாதாம் சாப்பிட்டால் சருமத்தின் அழகு அதிகரிக்கும். இது மட்டுமின்றி ஞாபக சக்தியை அதிகரிக்க பாதாம் உதவுகிறது. மேலும் பாதாமை விளையாட்டு வீரர்கள் அதிகமாக எடுத்துக் கொள்கின்றார்கள் காரணம் அதிக ஆற்றலையும் வலிமையும் பாதாம் நமக்கு தருகிறது.

3. பழைய சாதம்

காலையில் எழுந்தவுடன் இரவு தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சாதத்தை உணவாக எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் உடலில் ஏற்படுகிறது. மேலும் பழைய சாதம் ப்ரோ பயோடி நிறைந்துள்ளது. பழைய சாதத்தில் லட்சக்கணக்கான மனித உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களும் உள்ளது. இந்நிலையில் பழைய சாதம் எடுத்துக் கொண்டால் நீர்ச்சத்து, குடல் புண் மற்றும் உடல் வெப்பத்தை குறைக்கிறது .

 

4. முளைக்கட்டிய பயிர்கள்

முளைகட்டிய பயிர்கள் என்பது கம்பு, கேழ்வரகு, ராகி, பச்சை பயிறு போன்றவைகளை ஈரத் துணியில் இரவு ஊற வைத்தால் காலையில் முளைக்கட்டி இருக்கும். சாதாரண தானியங்களை விட

20 மடங்கு அதிக சத்துக்கள் முளைகட்டிய தானியங்களில் உள்ளது. மனித உடலில் ஹார்மோன்களை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

5. உலர் திராட்சை

உலர் திராட்சையில் விட்டமின் பி, சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது மட்டுமின்றி கால்சியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகளும் அதிக அளவில் உலர் திராட்சையில் உள்ளது. இதனை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான ஆற்றலை நாம் பெறமுடியும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பொருட்களில் ஏதேனும் ஒன்றை தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் நமக்குத் தேவையான அனைத்து ஆற்றல்களையும் ஆரோக்கியமான வாழ்வையும் நம்மால் வாழ முடியும். மேலுள்ள அனைத்து பொருட்களும் மனித உடலுக்கு அதிக அளவில் ஆரோக்கியத்தை தருகிறது. அது மட்டுமின்றி காலையில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இந்த உணவுகள் மிகவும் முக்கியமானது. அனைவரும் காலையில் ஏதோ ஒரு பழங்களை அல்லது உலர் பொருட்களை சாப்பிட்டு வந்தால் ஊட்டச்சத்து அதிகரிக்கும்.

Previous articleஇதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! மூன்று நாட்களில் 85% கொழுப்பு கல்லீரலை குணப்படுத்தலாம்!!
Next articleரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்!!