1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! 

Photo of author

By Savitha

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!!

ஓராண்டிற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் பாரத் திட்டத்தின் செயலாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை 2007 கிராம பஞ்சாயத்துகள் கண்ணாடி இழைவ மூலம் அருகில் உள்ள வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலக தலைமையிடத்திற்கு இணைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் சென்னையில் உள்ள வலையமைப்பு இயக்க மையத்தில் தெரியும்படி செய்யப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது