இங்கெல்லாம் பர்தா அணிய தடை! அரசின் புதிய உத்தரவு!

0
163
It is forbidden to wear burda here! Government's new order!
It is forbidden to wear burda here! Government's new order!

 இங்கெல்லாம் பர்தா அணிய தடை! அரசின் புதிய உத்தரவு!

சமீபகாலமாக மாணவர்களுக்கு இடையே மதமாற்றம் குறித்து பல சர்ச்சைகள் நடந்து வருகிறது. குறிப்பாக நமது தமிழகத்தில் தஞ்சாவூர் மாணவியின் தற்கொலை பெரும் பரபரப்பை உருவாக்கியது. மதமாற்றம் செய்யும்படி மாணவியை வற்புறுத்தி கூறியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி தமிழகத்தையே உளுக்கியது. அதுவே இன்றுவரை முடியாத நிலையில் அதற்கடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதித்தனர். அந்த செயலும் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் பி.யூ கல்லூரியில் படிக்கும் சில முஸ்லிம் மாணவர்கள் வகுப்பறைக்குள் பர்தா அணிந்து வந்துள்ளனர். அவர்கள் பர்தா அணிந்து வந்ததால் மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக அந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து தர்ணா போராட்டம் நடத்தினர். அத்தோடு தாங்கள் படிக்கும் கல்லூரி நிர்வாகம் தங்கள் அணியும் உடை சம்பந்தமான காரியங்களில் தலையிடுவதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

இந்த பர்தா அணியும் விவகாரம் குறித்து கர்நாடக உள்துறை மந்திரி அரக ஞானேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேட்டி அளித்த விதம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், பர்தா , காவி துண்டு ஆகியவற்றை கல்லூரிக்குள் அனுமதிக்க முடியாது. அதேபோல மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்க மட்டுமே வருகின்றனர் அதை தவிர்த்து பூஜை வழிபாடு போன்றவை நடத்த அல்ல. அதனால் ஹிஜாப் காவி துண்டு ஆகியவற்றை அணிந்து மத அடையாளங்களை காட்டும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது எனக் கூறினார்.

இவ்வாறான மத அடையாளங்களை அவரவர் வழிபாட்டு தாளங்களுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் பழக வேண்டும். அதுமட்டுமின்றி அனைத்து மாணவர்களும் பாரதமாதாவின் பிள்ளைகள் என்பதை உணர வேண்டும் என இவ்வாறு கூறினார்.அதன் பிறகு மாணவர்கள் அவரவர்குறிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.

கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தினர். அதற்கு ஏற்றவாறு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஃபாத்திமா , நான் சட்டப்பேரவைக்கு ஹிஜாப் அணிந்து தான் செல்கிறேன் என்னை தடுக்க யாருக்காவது துணிச்சல் உள்ளதா என சரமாரியான கேள்விகளை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து கர்நாடக அரசின் முன்னாள் முதல்வர் குமாரசாமி இந்த பர்தா அணிந்து வரும் தடையால் பெண்களுடைய கல்வி அதிகளவு பாதிக்கும் என்று கூறினார்.

இவ்வாறு ஒவ்வொரு அரசியல் பிரமுகர்களும் தங்களின் கருத்துக்களை மாறி மாறி கூறி வந்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மாநில கல்வி அமைச்சர் நாகேஷ் இதுகுறித்து விவரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளது, இந்திய ராணுவத்தில் கடைப்பிடிக்கப்படும் சட்டங்கள் வழிமுறைகள் போலதான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பின்பற்ற வேண்டும். இந்த சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி நடப்பவர்கள் அவர்கள் காண வழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் பெண் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் பொழுது ஹிஜாப் அணிந்து வரலாம் எனக் கூறினார். ஆனால் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்திற்குள் நுழைந்தவுடன் தங்கள் அணிந்து வந்த ஹிஜாப் கொடைகளை அகற்றி தங்கள் பையில் வைத்துக் கொள்ள வேண்டும் என புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைவருக்கும் ஒரே சீருடை தான். இவ்வாறான மதம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மாணவர்கள் அரசியல்வாதிகளின் கருவிகள் ஆகிவிடாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறினார்.

Previous article‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Next articleஇனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்!