இனி நான் எப்படி நடிக்க வேண்டும் என நான் மட்டும் தான் முடிவெடுக்க போகிறேன்!! நடிகை சமந்தா!!

Photo of author

By Gayathri

நடிகை சமந்தா அவர்கள் தமிழில் மட்டும் இன்றி மற்ற மொழி படங்களிலும் பிஸியாக வளம் வந்த நடிகை ஆவார்.

நேற்று மும்பையில் நடந்த பிசினஸ் டுடேயின் மோஸ்ட் பாப்புலர் வுமன் இன் பிசினஸ் 2024 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அவர்கள், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இந்த உலகில் சரியானதாக இருக்க வேண்டும் என்றும் அதற்காக இனி நடிக்கும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்வதாக கூறியுள்ளார். இப்போது வரை திரைப்படங்களில் பெரும்பாலும் பெண்களின் கதாப்பாத்திரத்தை ஆண்கள் தான் முடிவு செய்கின்றனர். அது மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சமந்தா அவர்கள் ஒரு நடிகையாக இந்த சமூகத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமைகளை குறித்தும் பேசியுள்ளார். அவை பின்வருமாறு :-

மக்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள். அது நிச்சயம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். நான் நடிக்கும் அனைத்து விளம்பரங்களின் பிராண்டுகளை பலரும் நம்பிக்கையோடு வாங்குகின்றனர். இந்த பிராண்டுகல் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் தான் நான் யார் என்பதை எடுத்துக் கூறும் என்று தெரிவித்திருந்தார்.

இவை மட்டுமின்றி இனி தான் விளம்பரங்களில் மட்டும் தேர்ந்தெடுத்த நடிக்காமல் திரைப்படங்களிலும் தனித்துவமாக தேர்வு செய்து நடிக்க போகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

சினிமா துறையை பொறுத்தவரையில் ஒரு படத்தில் பெண் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதை ஆண்கள் தான் முடிவு செய்கின்றனர் என்று கூறியவர், மேலும் ஒரு பெண்ணினுடைய கதாபாத்திரத்தை முடிவு செய்யக்கூடிய ஆண் ஒரு நடிகராகவோ, இயக்குனராகவோ அல்லது தயாரிப்பாளராகவோ இருக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். இந்த உலகிற்கு படத்தினை பார்க்கும் மக்களுக்கு ஒரு பெண்ணினுடைய கதாபாத்திரத்தை இப்படித்தான் இருக்க வேண்டும் என வடிவமைக்கும் ஆண்களின் இடையில், இது ஒரு பெண்ணின் பயணமாக அமையாது என்று கூறியுள்ளார் நடிகை சமந்தா.

இனி என்னுடைய விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை நான் மட்டுமே முடிவு செய்யப் போகிறேன் என்று நடிகை சமந்தா அவர்கள் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சமந்தா நடித்த சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர், ஆண்களுக்கு நிகரான வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியுள்ளது. ஒரு கதாநாயகன் என்ன செய்வானோ அதையே கதாநாயகியும் செய்யலாம் என்பதை இந்த வெப் தொடர் நிரூபித்துள்ளது. அதனால், இதற்கு மேல், பெண்களை மென்மையாக காட்டும் கதாப்பாத்திரங்களில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் அந்த நிகழ்ச்சி பேசியிருக்கிறார்.