அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! இல்லையென்றால் பணிக்கு அனுமதியில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு

Photo of author

By Anand

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! இல்லையென்றால் பணிக்கு அனுமதியில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட போட்டு கொள்ளாத அரசு ஊழியர்கள் இந்த அக்டோபர் மாதம் 16 தேதி முதல் பணிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பானது சற்றே குறைந்து வரும் சூழலில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.அந்த வகையில் அரசு அலுவலகங்களை திறக்கவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாநில அரசின் கீழ் உள்ள துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், முன்னணி தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் நாடு அதிக பாதிப்படைந்துள்ளதால் மேலும் தொற்று பரவாமல் இருக்க இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.அதனால் அக்டோபர் 16 முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களை அலுவலகம் மற்றும் அந்தந்த நிறுவனங்களுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 16 ஆம் தேதிக்கு மேல் அலுவலகத்திற்கு வருகை தரும் ஊழியர்கள் அனைவரிடமும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஊழியர்கள் பணிக்கு வரும் சூழலில் அவர்களை பணியில் அனுமதிக்க கூடாது எனவும் அரசு கூறியுள்ளது.