இனி ரயிலில் பயணம் செய்ய இது அவசியம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியா முழுவதிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.அரசு என்னதான் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மக்களிடம் தனி மனித சமூக இடைவெளி இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பொது மக்கள் நோய்வாய்ப்படுகின்றனர்.மாநில அரசுகளும்,மத்திய அரசுகளும் கலந்தாலோசித்து பல திட்டங்களை செயல்படுத்துகின்றன.
தற்போதைய கொரோனா மாநிலத்திற்கு ஏற்றவாறு உருமாறி மக்களை பாதிக்கிறது.அனைத்து மாநிலங்களிலும் முழு நேர ஊரடங்குகளும்,பகுதி நேர ஊரடங்குகளும் அமல்படுத்தப்படுகிறது.இதே போல் பயணம் மேற்கொள்ள பல கட்டளைகளையும் பிறப்பித்துள்ளது.இந்தியாவில் வடமாநிலங்களில் உருமாறிய கொரோனா மிக தீவிரமாக பரவுகிறது.
எனவே சமீப காலமாக மேற்கு வங்காளத்தில் அதிகரித்து வரும் நோய்தொற்றின் காரணமாக மேற்கு வங்க அரசு பல விரைவு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதில் மாநிலங்களில் ரயில் பயணம் செய்வோர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அரசாணை பிறப்பித்துள்ளது.மேலும் ரயில் பயணம் மேற்கொள்வோர் பயணத்திற்கு 72 மணிநேரத்திற்குள் கொரோனா நோய் தொற்று இல்லை என ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுக்கான சான்றிதழ்கள் தங்களுடன் வைத்திருப்பது கட்டாயம் என்ற புதிய அறிவிப்பை மேற்கு வங்க அரசு வெலியிட்டு இருக்கின்றது.