நானும் டெல்டாகாரன் தான் என்று சொன்னா மட்டும் போதாது!! முதல்ல டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை கொடுங்க!! 

நானும் டெல்டாகாரன் தான் என்று சொன்னா மட்டும் போதாது!! முதல்ல டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை கொடுங்க!! 

தற்போது திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் தந்திர மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது;

கொரோனாவிற்கு அடுத்தபடியாக தற்போது தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக பரவி வரும் டெங்கு காய்ச்சலை குறைப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்களை அதிகளவில் நடத்த வேண்டும்.

இந்த திமுக மாடல் ஆட்சியில் பெண் பயணிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகையை  அறிமுகப்படுத்திவிட்டு அவர்களிடம் சாதி உள்ளிட்ட விவரங்களை கேட்பது எப்படி நியாயமாகும். அவர்களிடம் ஜாதியை கேட்பது பிரச்சினையை தான் ஏற்படுத்தும். இலவசமாக பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் சாதி, தொலைபேசி எண்களை கேட்பது ஏன்?? இது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்.

அது மட்டும் இல்லாமல் முதலமைச்சர் நானும் டெல்டாக்காரன்  என்று எல்லோரிடமும் கூறி வருகிறார். இவ்வாறு டெல்டாக்காரன் என்று சொன்னால் மட்டும் போதாது. டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் முதலில் தண்ணீர் வழங்குவதற்கு  நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கி குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இந்த ஆண்டு  முழுமையான விளைச்சல் கிடைக்கவில்லை.

அவர்களுக்கு உரிய காலத்தில் தண்ணீர் தராமல்,  ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமே இழப்பீடு வழங்கி விவசாயிகளை இந்த திமுக அரசு ஏமாற்றி உள்ளது. தற்போது நடைபெறுவது ஒருபோதும் திராவிட மாடல் ஆட்சியே இல்லை. இது ஒரு தந்திரமான மாடல் ஆட்சி என்று அவர்  தெரிவித்தார்.