இனி அனைத்து ஸ்டேட் பாங்க வங்கிகளிலும் இது கட்டாயம்! சேர்மனின் அதிரடி நடவடிக்கை! 

Photo of author

By Rupa

இனி அனைத்து ஸ்டேட் பாங்க வங்கிகளிலும் இது கட்டாயம்! சேர்மனின் அதிரடி நடவடிக்கை! 

Rupa

Attention people! Banks will not work for these four days!

இனி அனைத்து ஸ்டேட் பாங்க வங்கிகளிலும் இது கட்டாயம்! சேர்மனின் அதிரடி நடவடிக்கை!

எம்பி வெங்கடேசன் அவர்கள் அனுப்பிய ஒரு கடிதத்தால் பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், எம்பி வெங்கடேசன் அவர்கள் இரு மாதங்களுக்கு முன்பு ஸ்டேட் பேங்க் சேர்மனுக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அதில் வங்கியில் பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கு என்று அந்தந்த அலுவலகங்களில் தனி கழிப்பறை கட்டாயம் வைக்க வேண்டும் எனக்கூறி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதனை பெற்றுக்கொண்ட ஸ்டேட் பாங்க் அவருக்கு பதில் கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில், 2018ஆம் ஆண்டு மகளிருக்கு என்று தனி கழிப்பறை அனைத்து அலுவல்களிலும் நிறுவ கோரி உத்தரவிட்டு இருந்தோம்.

இருப்பினும் நீங்கள் அனைத்து அலுவலகங்களிலும் மகளிர் கென்று தனி கழிவறை அமைத்திட வேண்டும் எனக் கூறியதன் அடிப்படையில் மீண்டும் அனைத்து கிளைகளிலும் தனி கழிப்பறை அமைந்துள்ளதா என கண்காணிக்க கோரியும், அவ்வாறு நிறுவப்படவில்லை என்றால் தனி கழிவறை அமைக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு ஸ்டேட் பாங்க் நிறுவன மேம்பாட்டு துணை மேலாண்மை இயக்குனர் திரு ஓம்பிரகாஷ் மிஸ்ரா எம்பி வெங்கடேசனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஓம் பிரகாஷ் அந்த கடிதத்தில் கூறியதாவது, தனி கழிப்பறை இல்லாத அலுவலகங்களில் கழிப்பறை அமைத்திட உடனடியாக கட்டிட உரிமையாளர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இவ்வாறு ஸ்டேட் பாங்க் மேலாண்மை இயக்குனர் திரு ஓம்பிரகாஷ் மிஸ்ரா எழுதிய கடிதத்திற்கு வெங்கடேசன் எம்பி நன்றி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தனி கழிவறை இல்லை என்ற பிரச்சனையை இந்திய வங்கி ஊழியர் சமையல் எனும் மற்றும் அதன் மகளிர் துணைக் குழு தன்னிடம் கோரியது. அதன் அடிப்படையில் நான் கழிப்பறைகளை அமைக்க வேண்டும் என்று கூறி கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு பதில் கடிதம் வந்ததோடு மட்டுமின்றி, அனைத்து அலுவலகங்களிலும் இந்த பிரச்சனை விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.