ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்!! அதிகாரிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு!!

Photo of author

By Rupa

ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்!! அதிகாரிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் உதவும் வகையில் ரேஷன் அட்டை மூலம் அன்றாட தேவையான அரிசி பருப்பு உள்ளிட்டவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர். அதேபோல மக்களின் தேவைக்கேற்ப அரசும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடமிருந்து தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்க ஏற்பாடு செய்வதாகவும் கூறியது. அதற்குண்டான நடவடிக்கைகளை தற்பொழுது எடுத்து வருகிறது. மேற்கொண்டு, வருடம் தோறும் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்க வழி செய்வதாகவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பெரும்பான்மையோரின் கோரிக்கையாக இருப்பது ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவது தான்.

இதனை சரிகட்டும் விதமாக ஆறு ஆலைகள் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்து விற்கப்படும். மேற்கொண்டு தற்பொழுது நுகர் பொருள் வாணிப கழகம் புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. அதாவது மக்கள் தொடர்ந்து வாங்கும் பொருட்களின் எடையானது குறைந்து தான் உள்ளது என்பதை புகாராக கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கப்படும் பொருட்கள் வழியிலேயே கடத்துவது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுகிறது. இதனையெல்லாம் தடுக்க இனிவரும் நாட்களில் நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் பொருட்கள் வெளியேறுவதற்கு முன் ஒரு முறை எடை போடப்படும். அதேபோல ரேஷன் கடைக்கு சென்ற வுடனும் ஒரு முறை எடை போடப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் பொருளின் எடை குறைவதை குறித்து கண்டறியலாம்.